‘Caddy’ பயிற்சி முயற்சி, இந்திய இளைஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தும்!

  • Home
  • Newsboard
  • News
  • ‘Caddy’ பயிற்சி முயற்சி, இந்திய இளைஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தும்!
February 15, 2025

கோலாலம்பூர், பிப்ரவரி 15-

AMS Caddy Academy, மலேசிய கோல்ஃப் அசோசியேஷன் (MGA) மற்றும் மலேசிய இந்திய திறன் முயற்சி (MISI) ஆகியவற்றுடன் இணைந்து இந்திய சமூகத்தினருக்காகத் திறன் பயிற்சி மற்றும் வேலை உத்தரவாதத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

மலேசியாவில் கோல்ஃப் துறையின் வளர்ச்சியை மேம்படுத்துவதோடு, உள்ளூர் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்புகளை அதிகரிப்பதையும் இந்த முயற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது.

நிகழ்ச்சியின் திறப்பு விழா மலாக்கா A’Famosa Golf Resort இல் சிறப்பாக நடைபெற்றது. இதில் மலாக்கா மாநில கவுன்சிலர் டத்தோ P. சண்முகம் மற்றும் MiSI, MGA மற்றும் AMS Caddy Academy-யின் முக்கிய பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

AMS Caddy Academy-யின் நிர்வாக இயக்குனர் லோ ஹாக் லாய் கூறுகையில், இந்த ஒத்துழைப்பு பங்கேற்பாளர்களுக்கு திறன் பயிற்சி அளிப்பது மட்டுமல்லாமல், நிலையான வேலை வாய்ப்புகள் மற்றும் அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச சம்பள சலுகைகள் மூலம் அவர்களின் எதிர்காலத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறது.

“இந்த திட்டம் பயிற்சி மட்டுமல்லாமல், பங்கேற்பாளர்களின் எதிர்கால நல்வாழ்வை உறுதி செய்யும். மேலும் உத்தரவாதமான வேலைவாய்ப்பு மற்றும் காப்பீட்டுத் தொகை மற்றும் தொழில் மேம்பாடு போன்ற நன்மைகளுடன், நாங்கள் மலேசியாவில் Caddy தொழிலுக்கு ஒரு புதிய தரத்தை அமைக்கிறோம்,” என்று அவர் கூறினார்.

இந்த முயற்சிக்கு மனிதவள அமைச்சு (KESUMA) மூலமாக அரசாங்கத்திடமிருந்து முழு ஆதரவையும் பெற்றுள்ளது.  திறன்கள் மற்றும் நிலையான வேலைவாய்ப்பை வழங்குவதன் மூலம் இந்திய சமூகத்தின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதிலும் இத்திட்டம் முக்கியப் பங்கு வகிக்கிறது என்று டத்தோ பி.சண்முகம் வலியுறுத்தினார்.

“இந்தப் பயிற்சியானது Caddy எனும் கோல்ஃப் விளையாட்டு உதவியாளர் வேலையை தொழில்முறையாக்குவதில் ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாகும், மேலும் இந்திய இளைஞர்கள் சிறந்த தரமான வேலைகளைப் பெறுவதற்கான இடத்தைத் திறப்பதோடு பொருளாதார முன்னேற்றம் மற்றும் நீண்ட கால தொழில் வளர்ச்சிக்கான வாய்ப்புகளை வழங்குவதால், மலாக்கா மற்றும் நாட்டின் பிற பகுதியிலிருந்து அதிகமான இந்திய  இளைஞர்களை இந்தத் திட்டத்தில் பங்கேற்க வேண்டும்” என்றும்  அவர் கேட்டுக் கொண்டார்.

AMS Caddy Academy 2029 ஆம் ஆண்டிற்குள் 2,300 பேருக்கு பயிற்சி அளித்து இடமளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

உள்ளூர் பணியாளர்கள் தொடர்ந்து வளர்ச்சியடைவதை உறுதிசெய்யவும், வெளிநாட்டுத் தொழிலாளர்களைச் சார்ந்திருப்பதைக் குறைக்கவும் மற்றும் மலேசியாவில் கோல்ஃப் தொழிலை வலுப்படுத்தவும் அரசாங்கத்தின் நோக்கத்துடன் இந்த முயற்சி அமைந்துள்ளது.

Source – Thinathanthi

About Us

The Malaysian Indian Skills Initiative (MiSI) is a strategic initiative committed to empowering Malaysian Indian professionals and entrepreneurs.

Create your account