முக ஒப்பனை கலை பயிற்சியில் இந்திய பெண்கள் நற்சான்றிதல் பெற்றனர்.
ஆர்.ரகுபதி
பேராக்-20 பிப்,
முக ஒப்பனை கலை பயிற்சியில் இந்திய பெண்கள் நற்சான்றிதல் பெற்றனர்.
மனிதவள அமைச்சரின் கீழ் செயல்ப்படும் மலேசிய இந்தியர்கள் முன்னேடுப்பு அமைப்பான(Misi) மூலமாக 25 இந்திய பெண்கள் பயிற்சியில் கலந்துக்கொண்டு வெற்றிக்கரமாக ஐந்து நாள் பயிற்சியினை முடித்தனர்.
பெண்களுக்கு முக அழகும் முக்கியமானது என்பதாலும் இதன் மூலம் கனிசமான வருமானத்தை பெற முடியும் என்பதினை நினைவில்க்கொண்டு மிசி இத்தகைய பயிற்சியினை ஏற்பாடு செய்திருந்தது.
மனிதவள அமைச்சர் ஸ்டிபன் சிம் நேரடி பார்வையில் நடைப்பெற்ற இப்பயிற்சி ஆனது இந்திய பெண்கள் தங்களுக்குள் இருக்கும் திறமையினை வெளியில் கொண்டு வந்து தங்களின் வருமானத்தையும் அதிகரித்துக்கொள்ள இத்தகைய பயிற்சிகள் மேலும் அவர்களுக்கு வலு சேர்க்கும் என்பது அமைச்சரின் தூர நோக்க சிந்தனையாகும்.
பேராக் ஊத்தான் மெலிந்தாங்கில் நடைப்பெற்ற இப்பயிற்சியில் அப்பகுதியை சேர்ந்த இந்திய பெண்கள் கலந்துக்கொண்டதுடன்,இப்பயிற்சியின் முடிவில் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு நற்சான்றிதல்களை எடுத்து வழங்கிய அத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் வசந்தி அவர்களுக்குக்கும் மிசி தங்களின் அன்பு கலந்த நன்றியினையும் தெரிவித்துக்கொண்டது.
இத்தகைய பயிற்சியில் கல்ந்துக்கொள்ள வேண்டும் அல்லது மேலும் பல தகவல்கள் பெற வேண்டும் என்றால் MISIKESUMA அகப்பக்கத்தை வலம் வாருங்கள்.