கடந்த 13 பிப்ரவரி முதல் 17 பிப்ரவரி வரை நடைப்பெற்ற பெண்களுக்கான இப்பயிற்சியில் 25 பெண்கள் கலந்துக்கொண்டு வெற்றிகரமாக தங்களின் பயிற்சி சான்றிதல்களை பெற்றனர்.
மனிதவள அமைச்சரின் நேரடி பார்வையில் செயல்ப்படும் மலேசிய இந்தியர் திறன் முன்னெடுப்பு அமைப்பின் மூலமாக பிரசவத்திற்கு பின் தாய்மார்கள் சந்திக்கும் உடல் ரீதியான மாற்றங்களை சரி செய்யவும் பிறந்த குழந்தையை இந்திய முறைப்படி குளிப்பாட்டி சுத்தம் செய்தல் போன்ற பயிற்சிகளை இவர்கள் மேற்க்கொண்டனர்.
மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம், இந்தியர்கள் வணிகத்தில் மேலும் வளர்ச்சிகான வேண்டும் என்கின்ற வகையில் இத்தகைய பல பயிற்சி திட்டங்களை அவர் நாடு தழுவிய நிலையில் இந்தியர்கள் மத்தியில் கொண்டு போய் சேர்க்கும் முயற்சியில் அவர் உறுதியுடன் ஈடுப்பட்டு இருப்பதாக மிசி அமைப்பு கூறியது.
இத்தகைய பயிற்சியின் மூலம் ஒருவர் குழந்தை மற்றும் தாயாரை குளியல் தெராபி மூலமாக சுயமாக ஒரு நபரிடம் இருந்தே வெ.1000 முதல் வெ.2000 வரை வருமானம் ஈட்டமுடியும் என்றும் கூறினர்.
இப்பயிற்சி வெற்றிகரமாக நடைப்பெற வற்றாத ஆதரவை வழங்கிய கோலகுபு பாரு சட்டமன்ற உறுப்பினர் பாங் சோக் தவு,உலு சிலாங்கூர் நாடாளுமன்ற ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சத்திய பிரகாஷ் ஆகியோர்க்கும் இவ்வேளை மிசி தங்களின் நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றது.
இது போல் நாடு தளுவிய நிலையில் நடைப்பெறும் இந்தியர்களுக்கான பயிற்சியில் கலந்துக்கொள்ள விரும்புவர்கள் அல்லது புதிய தகவல்களை அறிந்துக்கொள்ள விருப்பம் உள்ளவர்கள் MisiKesuma அகப்பக்கத்தை பின் தொடருங்கள்.